பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, April 9, 2020

கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட் 19)  வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கவிதை  (07-04-2020) ஆக்கப்பட்டுள்ளது.

-     கவியாக்கம் - கலாநெஞ்சன் ஷாஜஹான் (இலங்கை, நீர்கொழும்பு)1


Thursday, March 12, 2020

நீர்கொழும்பு ஹோட்டலில் நடந்தது என்ன ? - எம். இஸட். ஷாஜஹான்


 (13-3-2020   திகதி விடிவெள்ளி பத்திரிகையில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. நன்றி  - விடிவெள்ளி) 


  
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாரிகளின்  மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நகரங்களில் நீர்கொழும்பு பிரதானமானதாகும். நீர்கொழும்பு கட்டுவபிட்டியவில் அமைந்துள்ள தேவாலயத்தின் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.  இதன்காரணமாக பல  அப்பாவி உயிர்கள் பலியாயின. பலர் படுகாயங்களுக்கு உள்ளாயினர். புலர் தமது உறவுகளை இழந்தனர்.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில்; உள்ள ஏனைய முஸ்லிம்களைப் போன்று  நீர்கொழும்பு வாழ் முஸ்லிம்களும் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டனர்.

Sunday, November 24, 2019

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மூத்தோர் அணியினரின் வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா)


   இலங்கை அஹ்மதியா முஸ்லிம்  ஜமாஅத்தின் மூத்தோர் அணியினரின் (மஸ்லிஸ் அன்சாருல்லா) வருடாந்த தேசிய மாநாடு (இஜ்திமா) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
மூத்தோர் அணியினரின் தலைவர் கே. ஏ. சபீயுல்லாஹ் சாகிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய வினா விடைப் போட்டி, உர்து நஸம் போட்டிகள், குர்ஆன் ஆயத்துக்களை ஓதும் போட்டி, ஞாபக சக்தியை அளவிடும் போட்டி உட்பட பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் பல்வேறு தலைப்புக்களிலும் விசேட உரைகள் இடம்பெற்றன.

Saturday, April 20, 2019

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மாதர் அணியினரின் வருடாந்த கண்காட்சி SRILANKA LAJNA IMAILLAH , ANNUAL EXHIBITION 2019 ,



இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மாதர் அணியினர் (LAJNA IMAILLAH) வருடாந்தம் நடத்தும் பொருட் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று சனிக்கிழமை (20-4-2019) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின் (MASJID FAZL) ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் மாணவிகளின்  பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஆடை வகைகள், உணவு வகைகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், வெலிசறையில் அமைந்துள்ள அரசாங்க ஹோமியோபதி வைத்தியசாலையின் உதவியுடன் வைத்தியர்  திருமதி பரீனா பேகம் தலைமையில் அங்கு நோயாளிகளுக்கு இலவசாமாக ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த அஹ்மதியா ஜமாஅத்தின் கிளை அமைப்புகளைச் சேர்ந்த பெண்களும்  சிறுவர் சிறுமிகளும்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Monday, March 4, 2019

நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா



 நீர்கொழும்பு தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில்  நேற்று திங்கட்கிழமை  (4) இரவு மஹா சிவராத்திரி விழா இடம்;பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ ரவீந்ர குருக்கள் தலைமையில்  இரவு 8 மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாயின. இரவு 11 மணிக்கு இரண்டாம் சாம பூஜையும், நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் சாம பூஜையும், அதிகாலை 5 மணிக்கு நான்காம் சாம பூஜையும் இடம்பெற்றன.
பூஜைகள் நடைபெறுவதற்கு

Sunday, February 3, 2019

சுதந்திர தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு, பொலன்னறுவை அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசல்களில்; விசேட பிரார்த்தனை நிகழ்வு (PHOTOS)


இலங்கையின் 71  ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  இன்று (4)  காலை (9 மணிக்கு) நீர்கொழும்;பு  பெரியமுல்லையில் அமைந்துள்ள  அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் விசேட  பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.
   நீர்கொழும்பு ஜமாஅத் தலைவர் எச்.ஏ. இப்ராஹீம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. மௌலவி தாஹிர் அஹ்மத் பிரார்த்தனை நடத்தியதுடன் சுதந்திர தின விசேட சொற்பொழிவை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நிகழ்த்தினார்.

Sunday, December 16, 2018

ரணில் விக்ரமசிங்க பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்ததை அடுத்து நீர்கொழும்பு நகரில் பாற்சோறு பகிர்ந்து கொண்டாட்டம்


இன்று ரணில் விக்கரமசிங்க  ஜனாதிபதி முன்னிலையில் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்தததை அடுத்து நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் பாற்சோறு பகிர்ந்து பட்டாசு கொளுத்தி கொண்டாடினர். நகரின் சகல பிரதேசங்களிலும் பட்டாசு கொழுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நீர்கொழம்பு பிரதான அமைப்பாளரும் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமையில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில நிகழ்வு இடம்பெற்றது.

Sunday, December 9, 2018

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் (power Friends 98) ஒன்று கூடல் நிகழ்வு


நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்  1998  ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி  கற்ற மாணவர்களின் (power Friends 98) ஒன்றுகூடல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (9-12-2018) நீர்கொழும்பு போருதொட்ட வீதியில்  அமைந்துள்ள  The Kings Bay Hotel இல்  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில்  அன்று மாணவர்களுக்கு கற்பித்த வகுப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்  ஆகியோர் சிறப்பதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வில் பழைய மாணவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் பங்குபற்றினர்.

Wednesday, November 28, 2018

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா


 நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா இன்று புதன்கிழமை (28-11-2018) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அருட் தந்தை ரொஹான் பீரிஸ், மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
அருட் சகோதரி ஹேன் மேரி, அருட் சகோதரி குளொடில்டா பெர்னாந்து புள்ளே மற்றும்  மாணவர்களின் பெற்றோர்கள்  உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Monday, August 20, 2018

வீரகேசரி பத்திரிகைச் செய்தி (20-8-2018)


எனக்கு ‘தமிழ்ச் சுடர்’ விருது


தடாகம் கலை இலக்கிய வட்டம் கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள்  அமைச்சிலுள்ள அஞ்சல் அலுவலக தலைமையக் கட்டட  கேட்போர் கூடத்தில்  சனிக்கிழமை (18-8-2018) நடத்திய  பன்னாட்டு படை விழாவில் கலை இலக்கிய சமூக சேவையை பாராட்டி எனக்கு 'தமிழ்ச் சுடர்'  விருது  வழங்கப்பட்டது.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,

Sunday, August 19, 2018

தடாகம் கலை இலக்கிய வட்டம் நடத்திய பன்னாட்டு படை விழாவும் விருது வழங்கலும்


 தடாகம்  கலை இலக்கிய வட்டம் நடத்திய  பன்னாட்டு படை விழா  2018 நிகழ்வு சனிக்கிழமை (18-8-2018)  கொழும்பு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சிலுள்ள அஞ்சல் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைப் பெற்றது.
  தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில்  காலை 9 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரையும்  இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட 60 பேர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Monday, June 25, 2018

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்த கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்கள் (PHOTOS)


கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் கல்வி கற்ற  பழைய மாணவர் குழுவினர் (PEARLS OF HAMEEDIA)  தமக்கு கல்வி கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் பாடசாலைக்கு பல்வேறு வகையிலும் உதவி புரியும் பழைய மாணவர்களையும் விருது வழங்கி கௌரவித்தனர்.
 23-6-2018 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பு ரிச்வின் விளா (Richvin Villa)   இல்லத்தில் இடம்பெற்ற PEARLS OF HAMEEDIA பழைய மாணவர் குழுவின் ஒன்றுகூடல் மற்றும் இரவு விருந்து  நிகழ்வில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

Thursday, June 14, 2018

ஆன்மீக இன்பத்தை தந்த புனித ரமழான்



(வீரகேசரி பத்திரிகையில் நோன்புப் பெருநாள்  சிறப்பிதழில் 15-6-2018 அன்று பிரசுரமான கட்டுரை)

- எம். இஸட். ஷாஜஹான் 

ஒரு மாத காலம் ஆத்மீக இன்பத்தை தந்து அருள் மழை பொழிந்த புனித ரமழான் மாதம் நேற்றோடு எமை விட்டு பிரிந்து விட்டது. இன்று நாங்கள் புனித நோன்புப் பெருநாளை பெரு உவகையோடு கொண்டாடுகிறோம்.
இறைவனின் நேசத்தை பெறுவதற்காக தடுக்கப்பட்ட சகல காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து, நல்லமல்கள் பல புரிந்து, முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தம்மையே புடம்போட்டுக் கொண்டு இன்று இந்த மகத்துவம் மிக்க பெருநாளை கொண்டாடுகின்றோம்.
இறை பள்ளிவாசல்களில் 'தக்பீர்' முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. இறையடியார்களின் உள்ளத்தில் உவகை பெருக்கெடுத்தோடுகிறது.

Sunday, May 13, 2018

கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் நடத்திய திறமைகளின் விழா(TALENT FIESTA G82)


கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி தேசிய கல்லூரியில் 1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)  பழைய மாணவர்கள் குழுவினர் கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் மத்தியில்  கலை இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளை (TALENT FIESTA G82's)  கடந்த சனிக்கிழமை (12-5-2018)  நடத்தியது.
1982 ஆம் ஆண்டு கல்வி கல்வி கற்ற (PEARLS OF HAMEEDIYA)  பழைய மாணவர்கள் குழுவின் தலைவர் தொழிலதிபர் எஸ். எஸ். யு. ஜெய்னுல் ஆப்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம், கைவினை பொருள் தயாரிப்பு, அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டி,